Friday 14 December 2012

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்



கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

என்று பல ஆண்டுக்ளுக்கு முன்பு சொல்லி விட்டு சென்றார். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு கைதொழில் தெரியும். நாம் பல்வேறு நிருவனங்களில் வேலை பார்க்கலாம். உங்கள் பணியை செய்து கொண்டே ஓரு கைதொழிலை கற்று பகுதி நேரத்தில் வீட்டிலேயே செய்யலாம்.இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புக்ள்ளான நாடு ஜப்பான், ஆனால் அதன் கடின உழைப்புக்கு  பிறகு இன்றுவரை உலக அரங்கில் பணக்கார நாடுகள் பட்டியலில் அங்கம் வகித்து கொண்டு இருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். இதற்கு காரணம் அவர்களின் தொழில் வளர்ச்சி. எந்த வளமும் இல்லாத அந்த நாட்டில் எப்படி இந்த வளர்ச்சி. ஒவ்வொரு வீட்டிலும் எதாவது ஒரு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். நம் நாட்டில் இறக்குமதி ஆகும் ஜப்பானிய பொருட்களில் சில (பேனா, மின்னனு பொருள்கள் மற்றும் பல) அவர்கள் வீட்டில் தயாரித்த ஒன்றாக கூட இருக்கலாம்.

ஆனால் எல்லா வளமும் இருக்கின்ற நம் நாட்டில் கைத்தொழில் செய்வோர் மிககுறைவு. சரி.. எதாவது ஒரு தொழிலை செய்துதான் பார்ப்போமே.

கைதொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு,
அடிப்படை தேவை

1.ஆர்வம்
2.ஆக்கம்
3.முயற்சி
4.பயிற்சி
5.சிறிய முதலீடு

சரி! ஆர்வம் ஆக்கம் இருக்கின்றது... பயிற்சியும் செய்து கொள்வீர்கள்... சிறிய முதலீடும் தயார். இப்போது என்ன கைதொழில் செய்வது என்பது தான் கேள்வி.

இரண்டு வகைகளாக பிரிக்கலாம்...

1. நவீன கால கைத்தொழில்கள்

1. செல்போன் பழுது பார்த்தல்
2. ஸ்கிரீன் பிரிண்ட்டிங்
3. ரப்பர் ஸ்டேம்ப் தயாரித்தல்
4. பேப்பர் கப் தயாரித்தல்
5. மருதானி கோன் தயாரித்தல்
6. எம்ப்ராய்டிங்
7. சணல் பை தயாரித்தல்
8. மிதியடி தயாரித்தல்

2. பாரம்பரிய கைத்தொழில்கள்

1. தென்னை நார் கயிறு தயாரித்தல்
2. மெழுகுவர்த்தி தயாரித்தல்
3. கூடை முடைதல்
4. மண்பாண்டம் செய்தல்
5. கைத்தறி நெசவு
6. கை முருக்கு செய்தல்
7. ஊறுகாய் தயாரிப்பு

மேலே நான் தொகுத்துள்ள தொழில்கள் கொஞ்சம் தான், நமக்கு தெரியாத தொழில்கள் நம்மை சுற்றி, நம் ஊரை சுற்றி, நம் தேசத்தை சுற்றி, நம் உலகத்தை சுற்றி இருக்கின்றன. அவைகளில் நமக்கு பிடித்த ஒரு தொழிலை நன்றாக கற்று கொண்டு செய்யலாமே...