Monday 13 January 2014

இஸ்ரேல் வேளாண்மை

இஸ்ரேல் என்ற நாடு  பெரும்பாலும் பாலைவனம் நிறைந்த இடம். அந்த நாட்டில் நடக்கும் விவசாயம் உலகத்தையே தன் கவனத்தின் பால் ஈர்துக்கொண்டிருகிறது என்று சொன்னால் அது தான் உண்மை ...!

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1948-ம்  ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த நாடு. அதன் பிறகு சிதறுண்ட யூதர்கள் தங்கள் சொந்த தாயகத்துக்கு வரத்தொடங்கினர். முற்றிலும் பாலைவனத்தையும், சுற்றிலும் பகை நாடுகளையும் வைத்துக் கொண்டுள்ள அந்நாட்டின் வளர்ச்சி, வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விவசாயத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது என்றால் அது அவர்களின் நீர் மேலாண்மைஎங்கெங்கும் ... பாலைவனமும், சுண்ணாம்புப் பாறைகளும் தப்பித் தவறி மண் இருக்கும் இடத்திலும் ஓரடி ஆழத்துக்கு மட்டுமே மண் எப்பொழுதும் 50 டிகிரிக்கு மேல் வாட்டி எடுக்கும் வெயில் ஆண்டுக்கு வெறும் 200 மி மீ மழைப் பொழிவு மட்டுமே ... குறையாக நினைக்கப்படும் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டே, நிறைய நிறைய சாதிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். பனி பிரதேச நாடுகளில் வளரக்கூடிய பழங்கள் மற்றும் பூக்களை இந்த பாலைவன நிலத்தை மாற்றி, நவீன உத்திகளை கையாண்டு அந்த பழங்களையும் பூக்களையும் குளிர் பிரதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செயிகிறார்கள் என்று ஓரு தினசரி நாளிதழில் படித்தேன். அது உண்மை.


ஆனால் நம் தேசம் எல்லா வளங்களைப் பெற்றிருந்தும் என்ன பயன்? நம்மை  நாமே கேள்வி கேட்டால் என்ன பதில் வரும்? யாரை  குறை  கூறுவது? எத்தனை கேள்விகளை கேட்டாலும் பதில் பலவாறு வரும்?


1. விவசாயம்  பண்ணி  என்ன செய்ய போகிறோம்? 
2. ச் சீ  விவசாயமா அதயெல்லாம் யார் செய்வது ?
3. தண்ணீர் இல்லாத நிலத்தை வைத்து கொண்டு  என்ன செய்வது?
4. நான் இந்த நிலத்தினால் நழ்டம் தான் மிச்சம்.....!
5. நிலத்தை விற்று விட்டு நகரத்துக்கு செல்ல போகிறேன்....!
6. நான் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். விவசயமா?
7. நிலத்தை வீட்டு மனைகளாக்கி பெரும் பணம் பார்க்க போகிறேன்...!


- என்று கேள்வி கேட்ப்பார்கள். இந்த கேள்விகளை கேட்டவர்கள் வீட்டு மனைகாலக விற்று விட்டு, படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  விவசாயத்தை வேறு யாராவது போய் பார்த்து கொள்வார்கள்.  நம்மிடம் தான்  பணம் உள்ளதே...  நாம் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனையோடு நம்மில் எதனை பேர் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை படிக்கும் நண்பரே! நம்மை போல கொஜ்சம் விவசாயம் பார்த்து விவசாய நண்பர்கள் இந்த தொழிலை விட்டு விட்டு வந்து விட்டால் என்ன நடக்கும்?


ஒரு கிலோ அரிசி 500 ரூபாய் விற்கும் காலம் வந்து விடும் நண்பரே! இந்த விடயத்தின் நோக்கம் நாம் எந்த அளவுக்கு வேளாண்மையில் பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது தான். நம் நாட்டு பரப்பளவில் எத்தனையோ இஸ்ரேலை வைக்க முடியும் அந்த அளவுக்கு பரப்பளவில் பெரிய நாடு நம் நாடு.

ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் சென்றது இந்த வருடத்தில். பணவீக்கம் தொடர்ந்து வீக்கமாக தான்  இருக்குமே ஒழிய, ஒரு போதும்  குறையாது. நம்மிடத்தில் கங்கை, பிரமபுத்திரா, யமுனை என்ற வட இந்திய நதிகளும், காவேரி, கிருஷ்ணா, கோதாவரி என்ற தென்னிந்திய நதிகளும் இருந்து என்ன பயன்.ஆனால் ஜோர்தான் என்ற ஒரு நதி தான்  இஸ்ரேல் எல்லையோரமாக செல்கிறது. இந்த நதியை மட்டும் நம்பி இஸ்ரேலியர்கள் விவசாயம் செய்கிறார்கள். அந்த நாட்டில் தான் சொட்டு நீர் பாசனத்தை(Trip Irrigation) முறையாக பயன்படுத்துகிறார்கள்.