Showing posts with label நீங்களும் ஒரு விஞ்ஞானி. Show all posts
Showing posts with label நீங்களும் ஒரு விஞ்ஞானி. Show all posts

Friday, 4 July 2014

நீங்களும் ஒரு விஞ்ஞானி

ஒரு விஞ்ஞானி என்றால் உங்கள் நினைவுக்கு என்ன வரலாம் ... பள்ளி மற்றும்  கல்லூரிகளில் வரைந்து வைத்திருக்கும் பல விஞ்ஞானிகளின் உருவப்படங்கள் அல்லது அவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாக தோன்றலாம். ஆனால் அவர்கள் சாதாரண மக்களை போன்றே வாழ்ந்தவர்கள்.  இன்றைக்கு விஞ்ஞானம் இல்லையென்றால் நாம்  பழங்குடிகளாகத்தான் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்போம்.

ஆதி மனிதன் என்றைக்கு சிந்திக்க தொடங்கினானோ அன்றைக்கே விஞ்ஞானம் இந்த பூமியில் பிறந்து விட்டது. தாமசு ஆல்வா எடிசன்   ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார்.தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப்  பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரிரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும். பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார்.

எடிசனின் மனதில்   ஒரு தேடுதல், ஆக்கம், விடாமுயற்சி இருந்து கொண்டே இருந்தது. அவர் கண்டுபிடிப்பு இல்லை என்றால் நாம் இருளில் தான் வாழவேண்டியதாய் இருந்திருக்கலாம். அவரை போன்றே நம் தமிழ் நாட்டில் பிறந்து  சாதனைப் படுத்திய ஜி டி நாயுடு பல்வேறு கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துள்ளார். இவரும் பள்ளி படிப்பை சரியாக தொடரதவர். இவர்களை போன்று எண்ணற்ற விஞ்ஞானிகள் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கின்றனர்.

நம்மை போன்று சாதாரண மனிதர்களாக இருந்தும், இவர்களின் பின்னணி என்ன....?
இவர்கள் எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?

1.எப்படி?
2.ஏன்?
3.என்ன?
4.எதற்கு?
5.இப்படி இருந்தால் என்ன?
6.இதை மாற்றி அமைத்தால் என்ன?
7.உருவாக்கம் செய்தால் என்ன?

- இப்படி என்னற்ற வினாக்கள் விஞ்ஞானிகளுக்கு எழுந்திருக்க கூடும். சில நேரங்களில் தோல்வி அடைந்திருப்பார்கள் ஆனால் அவர்களின் விடாமுயற்சியால் பல நேரங்களில் வெற்றியும் அடைந்திருகிறார்கள். அந்த வெற்றிதான் நம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் உதாரணத்திற்கு கணிப்பொறி, தொலைக்காட்சி பெட்டி, மொபைல் மற்றும் பல்வேறு இயந்திரங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பதிவிற்கு வந்து இவிடயத்தை படித்துகொண்டிருக்கும் அன்பரே! நீங்களும் ஒரு விஞ்ஞானி தான். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கற்பனை திறன் உள்ளவர்களாக இருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குளே ஒரு திறமை மற்றும் ஒரு கற்பனை திறன் இருக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் நீங்களும் ஒரு விஞ்ஞானி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

வேளாண்துறையில் நம் நாடு சர்வதேச அளவில் முன்னேறிய நாடு என்றாலும் கூட, வேளாண்துறை சார்ந்த இயந்திரங்கள் கண்டு பிடிப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் சற்று நீண்ட பயணமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் வேளாண் இயந்திரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இறக்குமதியாக இருக்கின்றது. நாம் கண்டு பிடித்த இயந்திரங்களை நாமே பயன்படுத்தலாமே.

இயற்கை உர மேலாண்மையில் மறைந்த இயற்கை விஞ்ஞானி மதிப்புக்குரிய திரு.நம்மாழ்வார் அவர்கள் இயற்கை சார்ந்த உரங்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். அவரை நாம் இழந்தது மிகப்பெரும் இழப்பு. அவரும் பல இயற்கை உரங்களை கண்டு பிடித்து பயன்படுத்த சொன்னார்.

தொடரும்...